மழை பெய்ய நாங்களே காரணம்; கூசாமல் சொல்கிறார் குமாரசாமி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ராம்நகர்-''எங்களின் பஞ்சரத்னா திட்டங்களில் ஒன்றான, 'ஜனதா ஜலதாரே' யாத்திரையின் பலனாக, கர்நாடகாவில் இந்த அளவுக்கு மழை பெய்கிறது,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.ராம்நகரில் நேற்று அவர் கூறியதாவது:எங்கள் கட்சியின், 'பஞ்சரத்னா' திட்டங்களில் ஒன்றான 'ஜனதா ஜலதாரே' யாத்திரை நடத்தியதன் பயனாக, மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. சிறார்களுக்கு



ராம்நகர்-''எங்களின் பஞ்சரத்னா திட்டங்களில் ஒன்றான, 'ஜனதா ஜலதாரே' யாத்திரையின் பலனாக, கர்நாடகாவில் இந்த அளவுக்கு மழை பெய்கிறது,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.ராம்நகரில் நேற்று அவர் கூறியதாவது:எங்கள் கட்சியின், 'பஞ்சரத்னா' திட்டங்களில் ஒன்றான 'ஜனதா ஜலதாரே' யாத்திரை நடத்தியதன் பயனாக, மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. சிறார்களுக்கு தரமான கல்வி, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தில், கர்நாடக பப்ளிக் ஹைடெக் அரசு பள்ளி கட்டுவது.வீடு, வீடாக ஆரோக்கிய சேவை, பெண்கள், யாரையும் சாராமல் வாழ்வதற்கான திட்டங்கள், வேலையில்லாத இளம்பெண், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உட்பட பல அம்சங்கள் கொண்டது 'பஞ்சரத்னா' திட்டம். மக்களின் ஆசி இருந்தால், 2023 சட்டசபை தேர்தலுக்கு பின், நான் முதல்வராவதில் சந்தேகமே இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X