அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு பொதுமக்கள் கறுப்பு கொடி ஏற்றம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பெண்ணாடம்:பெண்ணாடத்தில், அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் கறுப்புக்கொடி ஏற்றியதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சி, திருமலை அகரத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு அரசு இடம் ஒன்றரை ஏக்கர் உள்ளது. இந்த இடம், நான்கு மாதங்களுக்கு முன் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட
அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு பொதுமக்கள் கறுப்பு கொடி ஏற்றம்

பெண்ணாடம்:பெண்ணாடத்தில், அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் கறுப்புக்கொடி ஏற்றியதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சி, திருமலை அகரத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு அரசு இடம் ஒன்றரை ஏக்கர் உள்ளது. இந்த இடம், நான்கு மாதங்களுக்கு முன் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட தேர்வு செய்யப்பட்டது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர், அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்பினர்.அந்த இடத்தை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், சிறுகுறு மற்றும் தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் பார்வையிட வருவதாக தெரிந்தது.

இதையறிந்த அப்பகுதி மக்கள், வீடுகளுக்கு முன் கறுப்புக்கொடியேற்றி, அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.தகவலறிந்த அமைச்சர்கள், நிகழ்ச்சியை ரத்து செய்து, பெண்ணாடம் வழியாக திட்டக்குடி சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X