அத்தை குடும்பத்தை கொன்றவரை நன்னடத்தையால் விடுவிக்க எதிர்ப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
தட்சிண கன்னடா,-பணத்துக்காக நான்கு பேரை கொன்றவரின் நன்னடத்தை காரணமாக, அவரை விடுக்க, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தட்சிண கன்னடா, மங்களூரின் உப்பினங்கடி பெரியட்காவை சேர்ந்தவர் பிரவீன் குமார், 62. லாட்டரி சீட்டு வாங்குவதில் அடிமையான இவர், அதற்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளார்.கடனை அடைக்க, 1994ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி வாமான்ஜுரில் வசித்து

தட்சிண கன்னடா,-பணத்துக்காக நான்கு பேரை கொன்றவரின் நன்னடத்தை காரணமாக, அவரை விடுக்க, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தட்சிண கன்னடா, மங்களூரின் உப்பினங்கடி பெரியட்காவை சேர்ந்தவர் பிரவீன் குமார், 62. லாட்டரி சீட்டு வாங்குவதில் அடிமையான இவர், அதற்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளார்.கடனை அடைக்க, 1994ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி வாமான்ஜுரில் வசித்து வந்த தன் அத்தை அப்பி செரிகர்தி, அவரது மகன் கோவிந்தா, மகள் சகுந்தலா, பேத்தி தீபிகாவை படுகொலை செய்து, வீட்டில் இருந்த தங்க நகைகளுடன் தலைமறைவானார்.விசாரணை நடத்திய போலீசார், சில நாட்களில் பிரவீன் குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். பத்து ஆண்டுகளுக்கு பின், இவரின் துாக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.இந்நிலையில், நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவை ஒட்டி, நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது.

இதில், பிரவீன் குமார் பெயரும் இடம் பெற்றுள்ளது.பெலகாவி ஹின்டல்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரவீன் குமாரை விடுவிப்பது குறித்து, தட்சிண கன்னடா மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு தகவல் சென்றுள்ளது.இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் குருபூர் கூறியதாவது:பண பேராசையால் சொந்த பந்தங்களை கொன்ற பிரவீன், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டால் சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்.அவரின் சொந்த குடும்பத்தினரும், அவரது விடுதலை குறித்து கவலையில் உள்ளனர். இதுபோன்ற இரக்கமற்ற கொலையாளியை விடுவிப்பது சுதந்திர தின அமுத பெருவிழாவை அவமதிக்கும் செயலாகும்.இவ்வாறு அவர் கூறினார்.குற்றவாளியை விடுவிப்பது தொடர்பான கடிதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் கவனிக்கிறேன்.


-ஹிரிஷிகேஷ் சோனவனே, எஸ்.பி., தட்சிண கன்னடா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X