கமுதி பல் டாக்டர் டி.எஸ்.பி.,யானார்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உலகநடையை சேர்ந்த ரமேஷ்குமார் மனைவி பாண்டீஸ்வரி 28.பல் டாக்டரான இவர் அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற்றார்.தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.,யாக தேர்வாகியுள்ளார்.பாண்டீஸ்வரி கூறியதாவது: 2018ல் பல் டாக்டர் பட்டம் பெற்றேன். 2019 முதல் அரசு தேர்வுக்கு படித்து வந்தேன். சமீபத்தில் நடந்த
கமுதி பல் டாக்டர் டி.எஸ்.பி.,யானார்

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உலகநடையை சேர்ந்த ரமேஷ்குமார் மனைவி பாண்டீஸ்வரி 28.பல் டாக்டரான இவர் அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற்றார்.

தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.,யாக தேர்வாகியுள்ளார்.பாண்டீஸ்வரி கூறியதாவது: 2018ல் பல் டாக்டர் பட்டம் பெற்றேன். 2019 முதல் அரசு தேர்வுக்கு படித்து வந்தேன்.

சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் 522.5 மார்க் பெற்று மாநில அளவில் 57ம் இடம் பிடித்து டி.எஸ்.பி., ஆக பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளேன். முதல் முயற்சியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. தந்தை விருப்பப்படி டாக்டர் ஆகிவிட்டேன்.எனக்கு கலெக்டர் ஆவதே விருப்பம். என் முயற்சி தொடரும் என்றார்.அவருக்கு கட்லாங்குளம் கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X