'வெள்ளையனே வெளியேறு' தியாகிகளுக்கு கவுரவம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பெங்களூரு,-வெள்ளையனே வெளியேறு இயக்க தினமான ஆகஸ்ட் 9ம் தேதி, பெங்களூரில் உள்ள இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கவுரவிக்க உள்ளார்.நாட்டின் 75வது சுதந்திர அமுத பெருவிழாவை ஒட்டி, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.மேலும், அனைத்து மாநில கவர்னர்களும் சுதந்திர போராட்ட வீரர்களை நேரில் சந்தித்து கவுரவிக்கவும்

பெங்களூரு,-வெள்ளையனே வெளியேறு இயக்க தினமான ஆகஸ்ட் 9ம் தேதி, பெங்களூரில் உள்ள இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கவுரவிக்க உள்ளார்.நாட்டின் 75வது சுதந்திர அமுத பெருவிழாவை ஒட்டி, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

மேலும், அனைத்து மாநில கவர்னர்களும் சுதந்திர போராட்ட வீரர்களை நேரில் சந்தித்து கவுரவிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.இந்த வகையில், வெள்ளையனே வெளியேறு இயக்க தினமான ஆகஸ்ட் 9ம் தேதி, பெங்களூரில் உள்ள இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கவுரவிக்க உள்ளார்.அன்றைய தினம் காலை 10:30 மணிக்கு, நகரின் மல்லேஸ்வரத்தில் உள்ள வி.நாகபூஷன் ராவ்; ஹலசூரில் உள்ள ஆர்.நாராயணப்பா ஆகியோர் வீடுகளுக்கு நேரில் செல்ல கவர்னர் முடிவு செய்துள்ளார்.அதே நாளில், மற்ற மாவட்டங்களில், கலெக்டர்கள் சுதந்திர போராட்ட வீரர்களை சந்தித்து கவுரவிக்க உள்ளனர். இது குறித்து, மாநில தலைமை செயலர் வந்திதா ஷர்மாவுக்கு, கவர்னர் அறிவுறுத்தியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X