த்துார்:தீபாவளிக்காக டம்மி ரூபாய் நோட்டு வரும் ரோல்கேப் துப்பாக்கி, ரிமோட் மூலம் வெடிக்கும் பட்டாசு, 60 நொடி வெடிக்கும் லாபி பாப் புஸ்வானம், 200 செ.மீ., நீள கம்பி மத்தாப்பு உட்பட பல புதிய ரகங்களை சாத்துார் பட்டாசு தொழிற்சாலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்துார் ஏழாயிரம் பண்ணை கீழச் செல்லையாபுரம் பாண்டியன் பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தினர் இவற்றை அறிமுகம் செய்துள்ளனர்.பட்டாசு ஆலை உரிமையாளர் கந்தசாமி கூறியதாவது: வழக்கமான புஸ்வானம் போன்று இல்லாமல் நவீன முறையில் ஒரியோ பவுல், ரவுடி பேபி, டிரம்ஸ்டிக், லாலி பாப், பிங்கோ, ஆகிய பெயர்களில் புஸ்வானம் தயார் செய்யப்பட்டுள்ளது.
டிரம்ஸ்டிக், ஒரியோ பவுல், பட்டாசுகள் பூச்சட்டி ரகங்கள். டிரம்ஸ்டிக் பட்டாசு கொளுத்தினால் டிரம் செட் ஒலி வரும், ஓரியோ பவுல் புஸ்வானம் வானில் உள்ள நட்சத்திரம் போன்று ஜொலிக்கும், பிங்கோ, லாலிபாப் புஸ்வானம் 60 நொடிகள் வரை வெடிக்கும். புகை யில்லாமல் வெளிச்சம் தரும் வகை யில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ரெளடி பேபி புஸ்வானம் 10 அடி உயரம் வரை பல வண்ணங்களில் பூச் சிதறல் போல் ஜொலிக்கும்.வழக்கமாக 75 செ.மீ. நீளத்தில் தான் கம்பி மத்தாப்பு செய்யப்படும் தற்போது 100 செ.மீ., 200 செ.மீ. நீளத்தில் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பான முறையில் தள்ளி இருந்து பட்டாசுகளை வெடிக்கலாம்.சுப்ரீம் துப்பாக்கி வெடி அறிமுகம் செய்துள்ளோம். ரோல் கேப் வெடியை நிரப்பி டிரிக்கரை அழுத்தியவுடன் வெடி சத்தத்துடன் டம்மி ரூபாய் நோட்டுகள் வெளிவரும். கோல்டுபயோரோ வெடியை ரிமோட் கண்டிரோல் மூலம் வெடிக்கலாம், என்றார்.