ஆசிரமத்தில் இருந்து10 வெளிநாட்டினர் ஓட்டம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
தொட்டகுப்பி,-பாஸ்போர்ட், விசா காலாவதி ஆகிவிட்டதால், ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 10 வெளிநாட்டு பயணியர் தப்பி ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பெங்களூரு தொட்டகுப்பி கே.ஆர்.சி., சாலையில், 'நியூ ஆர்க் மிஷன்' என்ற தொண்டு நிறுவனம் ஆசிரமம் நடத்தி வருகிறது. குடும்பத்தினரால் கைவிடபட்டோர், தீராத நோய்களால் அவதிப்படுவோர், நடைபாதைகளில் ஆதரவின்றி கஷ்டப்படுவோர் உட்பட



தொட்டகுப்பி,-பாஸ்போர்ட், விசா காலாவதி ஆகிவிட்டதால், ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 10 வெளிநாட்டு பயணியர் தப்பி ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பெங்களூரு தொட்டகுப்பி கே.ஆர்.சி., சாலையில், 'நியூ ஆர்க் மிஷன்' என்ற தொண்டு நிறுவனம் ஆசிரமம் நடத்தி வருகிறது. குடும்பத்தினரால் கைவிடபட்டோர், தீராத நோய்களால் அவதிப்படுவோர், நடைபாதைகளில் ஆதரவின்றி கஷ்டப்படுவோர் உட்பட பலருக்கு ஆசிரமத்தில் ஆதரவு அளிக்கப்படுகிறது.இங்கு, 750க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இங்கிருந்து, ஜூலை 19ம் தேதி ஏழு பேர்; ஜூலை 27ம் தேதி மூவர் என பத்து பேர், தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, ஆசிரம நிர்வாகி ராஜா, 55, கொத்தனுார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.இதில், வங்க தேசத்தை சேர்ந்த முகமது சுஹீல் ரானா, 34, ஜல்கல் அலி, 34, உஜ்ஜல், 30, முகமது உசேன், 25, முசா சேக், 27, ரஹீம், 27, ஆரிபுல்லா இஸ்லாம், 26; உகாண்டா நாட்டின் நமிரெம்பே கேத்ரித், 27, மரியா, 30, செரூப் சிஸ்கோ சிர்ஷா, 30, ஆகியோர் அடங்குவர்.இவர்களின் பாஸ்போர்ட், விசா காலாவதி ஆகிவிட்டதால், வெளியுறவு பதிவு மண்டல அதிகாரிகளால் மீட்கப்பட்டு, ஆசிரமத்தில் சேர்த்திருந்தனர். போலீஸ் தகவல்படி, வங்கதேச பயணியர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்தும்; உகாண்டா பயணியர் கயிறு மூலம் கேட்டில் ஏறியும் தப்பி சென்றதாக தெரிய வந்துள்ளது.அவர்களை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X