பெலகாவி-காங்கிரஸ் பெண் பிரமுகர் கணவரின் முன்ஜாமின் மனுவை, பெலகாவி எட்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.பெலகாவி தோட்டக்கலைத் துறை இயக்குனராக இருப்பவர் ராஜகுமாரா டாகளே, 40. இவர் தன் மனைவியும், காங்கிரஸ் பெண் பிரமுகருமான நவ்யாஸ்ரீ மீது கடந்த மாதம் 18ம் தேதி பெலகாவி ஏ.பி.எம்.சி., போலீசில் புகார் செய்தார்.அதில், 'என் மனைவி எனக்கு மனதனளவில் தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுக்கிறார். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, கூறி இருந்தார்.இதை மறுத்த நவ்யாஸ்ரீ, 'அவர், என்னை மோசடி செய்துள்ளார். ஏற்கனவே மனைவி இருந்தும் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். என் ஆபாச படங்களை வெளியிட்டு, என் கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார். கடத்தி சென்று மாந்தோப்பில் அடைத்து வைத்திருந்தார்' என, கூறி இருந்தார்.இத்துடன் கணவர் மீது 23ம் தேதி 12 பக்க புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது பலாத்காரம், கடத்தல், கருக்கலைப்பு செய்தது, மோசடி, பெண்கள் மீது வன்முறை, தகாத வார்த்தைகளில் திட்டுதல், கொலை மிரட்டல், கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்துதல் உட்பட 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து ராஜகுமாரா, முன்ஜாமின் கோரி பெலகாவி எட்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை, நீதிபதி ஆனந்த் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.