தங்கவயல் செக் போஸ்ட்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
இது எந்த ஊரு நியாயம்?பெமலின் ஆலமர பகுதியில் சாலை அகலப்படுத்த, பொதுப்பணித் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை துவக்கும் முன் நோட்டீஸ் கொடுத்திருக்கணும். உடமைகளை காலி செய்ய அவகாசம் வழங்கி இருக்கணுமுன்னு காக்கி பெரிய ஆபீசர், இடிக்க வந்தவர்களை அதட்டினார்.இவரை பார்த்து 'சீன்' காட்ட வேணாம்னு செங்கோட்டை முனி., தன் ஸ்டைலை காண்பித்தார்.அசோகா நகர், உரிகம் அம்பேத்கர்



இது எந்த ஊரு நியாயம்?

பெமலின் ஆலமர பகுதியில் சாலை அகலப்படுத்த, பொதுப்பணித் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை துவக்கும் முன் நோட்டீஸ் கொடுத்திருக்கணும். உடமைகளை காலி செய்ய அவகாசம் வழங்கி இருக்கணுமுன்னு காக்கி பெரிய ஆபீசர், இடிக்க வந்தவர்களை அதட்டினார்.இவரை பார்த்து 'சீன்' காட்ட வேணாம்னு செங்கோட்டை முனி., தன் ஸ்டைலை காண்பித்தார்.அசோகா நகர், உரிகம் அம்பேத்கர் சாலை, கவுதம் நகர் பகுதியில் சாலை அகலப்படுத்த இடிப்பு பணியின்போது கேட்க நாதியில்லாமல் போனது. மக்கள் தலைவர்கள் என்போர் காணாமல் போயினர். இடிப்பு விவகாரங்களில் பணக்காரர்களின் கட்டடங்களுக்கு ஒரு நியாயம், ஏழைகளின் வீடுகளுக்கு ஒரு நியாயமா? ஆபீசர்கள் கூட பாரபட்சம் காட்டலாமா? இதற்கு நியாயமான பதிலை யார் தருவது?கல்வெட்டு எங்கே?தபால் நிலையம், நகராட்சி அலுவலகத்தில்தேசியக் கொடிகளை விற்பனை செய்றாங்க. ஒவ்வொரு கொடியும் 25 ரூபாய். கேட்டு வாங்கி வீடுகள் மீது ஏற்றி தங்கள் தேச பக்தி மூலம் காட்டலாமே. குருபவன் வளாகத்தில், தேசப் பிதா சிலையை நிறுவினாங்க. அந்தசிலையை காணலையே. இதுபற்றி சிந்திக்கவேணாமா?காந்தி சதுக்கத்தில் தேசப்பிதா சிலையை சுதந்திர போராட்ட தியாகிகள் உட்பட தேச பக்தர்கள் 1962 ஜூன் 9ல் திறந்து வைத்தனரே. அதன் கல்வெட்டை முனிசிபாலிட்டி அகற்றியதே. இந்த கல்வெட்டு எங்கே; எந்த கோலத்தில் இருக்கிறதென யாருக்காவது தெரியுமா?நாங்கள் கியாரன்டி!குடிநீருக்காகவே எரகோள் அணை கட்டப்பட்டது. இந்த அணை நீர், தங்கவயலுக்கும் கிடைக்க வேண்டும் என்றால், புல்லுக்கட்டின், 'மாஜி' முதல்வர் மீண்டும் சி.எம்., ஆக வேண்டும்; கோல்டு சிட்டியிலும் கூட புல்லுக் கட்டு வேட்பாளரையே தேர்வு செய்ய வேண்டும்; அப்படி நீங்கள் செய்தால், நாங்கள் அதுக்கு கியாரண்டி.'இங்கிருந்து, 200 கி.மீ., தொலைவில் இருக்கும் காவிரிக்கு கனா காண்பதை விட 14 கி.மீ., தொலைவில் உள்ள எரகோளை பெற மற்றவங்க யோசிக்கிறாங்களோ இல்லையோ, புல்லுக்கட்டுக்காரர்களாகிய நாங்க சொல்வதை செய்வோம்' என, அக்கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரகாசமான தலைவரு கூறியிருக்காரு.மின் மீட்டர் எப்போது கிடைக்கும்?அனைவருக்கும் மின்சார இணைப்பு கட்டாயம் கிடைக்க வேண்டும். அதற்கு, ஆதார் அடையாள அட்டை ஒன்று இருந்தால் மட்டுமே போதுமென கவர்மென்ட் உத்தரவு இருந்தும் கூட, கோல்டு மைன்ஸ் பெரிய செக்யூரிட்டி ஆபீசர், இதுக்கு மடியவே இல்லை. ஆனா, கவர்மென்ட் உத்தரவோடு,ச.ம.உ., அந்த ஆபீசரிடம் கிளி பிள்ளைக்கு புரிகிற மாதிரிஎடுத்துச் சொல்லி, 1,000 வீடுகளுக்கு மின் இணைப்பு பெற செய்திட்டாராம்.சிட்டி பகுதியின் குடிசைப் பகுதிகளுக்கு மின் மீட்டர் ஏற்படுத்துவதாகவும், அதற்குரிய தொகையை முனிசி., கட்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினாங்க. அது எப்போது நடைமுறைக்கு வருமோ.மாதந்தோறும் கூடுகிற கூட்டத்தில் தீர்மானத்துக்கு பஞ்சமே இல்லை. ஆனால், அமலுக்கு கொண்டுவர ஆபீசர்கள் ஒத்துழைக்கலையாமே!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X