விஜயநகரா-ஹொஸ்கோட் புறநகரில், தேசிய நெடுஞ்சாலை 50ன் சுரங்கப்பாதையில், மீண்டும் தண்ணீர் கசிய துவங்கியுள்ளது.விஜயநகரா, ஹொஸ்பேட் புறநகரின், தேசிய நெடுஞ்சாலை 50ன் சுரங்கப்பாதை, ஹொஸ்பேட் நுழைவு வாசலில் உள்ளது. சுற்றுலா பயணியருக்கு மிகவும் விருப்பமானது.இதை ஒட்டியபடி துங்கபத்ரா அணை, சுற்றிலும் கால்வாய்கள், ஏரிகள் அமைந்துள்ளன. ரயிலில் பயணித்தபடி, இந்த இடத்தை காண்பது புதிய அனுபவமாக இருக்கும்.பெங்களூரு, மங்களூரு, விஜயபுரா, சொல்லாபுரா, புனே உட்பட பல முக்கிய நகரங்களுக்கு, இந்த சுரங்கப்பாதை இணைப்பு பாலமாக உள்ளது. ஹொஸ்பேட் சுரங்கப்பாதை, இந்தியாவின் அதிசயங்களில் ஒன்று என, மத்திய நில போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி புகழ்ந்துள்ளார். புகைப்படங்களுடன் 'டுவிட்' செய்திருந்தார்.சுரங்கப்பாதையில் செல்லும் வாகன பயணியர் பலரும், வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி, சிறிது நேரம் பொழுது போக்குவர். செல்பி, போட்டோ எடுப்பர். ஆனால் தொடர் மழையால் சுரங்கப்பாதையில், தண்ணீர் கசிகிறது.முந்தைய ஆண்டும் கூட, கனமழை பெய்த போது, சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிந்தது. உட்புற மின் விளக்குகள் பாழாகி, இருள் சூழ்ந்தது. இதையறிந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுரங்கப்பாதையை பழுது பார்த்தனர். தற்போது மீண்டும் தண்ணீர் கசிய துவங்கியுள்ளது.