போலி பணி நியமன உத்தரவு: அமைச்சரின் ஆசிரியர் கைது

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பெங்களூரு-லட்சக்கணக்கான ரூபாய் பெற்று கால்நடை துறை அமைச்சர் பிரபு சவுஹான் பெயரில், போலி பணி நியமன உத்தரவு பிறப்பித்த அவரது கன்னட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.கர்நாடகாவில் எஸ்.ஐ., தேர்வு முறைகேடு மாநிலத்தையே உலுக்கியது. பேராசிரியர்கள் நியமனத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரசார் குற்றஞ்சாட்டினர்.தற்போது, கர்நாடக கால்நடை துறை அமைச்சர் பிரபு சவுஹான் பெயரில்

பெங்களூரு-லட்சக்கணக்கான ரூபாய் பெற்று கால்நடை துறை அமைச்சர் பிரபு சவுஹான் பெயரில், போலி பணி நியமன உத்தரவு பிறப்பித்த அவரது கன்னட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவில் எஸ்.ஐ., தேர்வு முறைகேடு மாநிலத்தையே உலுக்கியது. பேராசிரியர்கள் நியமனத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரசார் குற்றஞ்சாட்டினர்.தற்போது, கர்நாடக கால்நடை துறை அமைச்சர் பிரபு சவுஹான் பெயரில் போலி நியமன உத்தரவு மூலம், அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கன்னடம் கற்றுக் கொள்வதற்காக ஞானதேவ் ஜாதவ், 48, என்பவரை ஆசிரியராக அமைச்சர் பிரபு சவுஹான், 2019ல் நியமித்து கொண்டார். இவர், அமைச்சர் தனக்கு நெருங்கியவர் என்று கூறிக் கொண்டு, கால்நடை துறையில், முதல் நிலை ஊழியர், இரண்டாம் நிலை ஊழியர் ஆகிய பணியிடங்களை பெற்று தருவதாக, 63 பேரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.தலா 2 லட்சம் முதல், 4 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று கொண்டு, அமைச்சர் பெயரில் போலி நியமன உத்தரவு வழங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.மேலும், பணி நியமனத்துக்கான போலி அரசாணையும் பிறப்பித்துஉள்ளார்.அது போலி என்று தெரிந்த பின், பாதிக்கப்பட்டோர் பெங்களூரு சஞ்சய் நகர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தனர்.இதையடுத்து, அமைச்சரின் கன்னட ஆசிரியர் ஞானதேவ் ஜாதவ், நேற்று பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இவ்விஷயம், பா.ஜ., அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திஉள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X