விவசாயிகள் போராட்டம் உயர் நீதிமன்றம் அனுமதி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
நாகப்பட்டினம்,:விவசாயிகளுக்கு மாற்று வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என, பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனத்தை வலியுறுத்தி, நாகையில், 40 கிராம விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.நாகை அருகே பனங்குடியில் அமைந்துள்ள சி.பி.சி.எல்., எனும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், தொழிற்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, 40 கிராமங்களில், 694 ஏக்கர் நிலத்தை
விவசாயிகள் போராட்டம் உயர் நீதிமன்றம் அனுமதி

நாகப்பட்டினம்,:விவசாயிகளுக்கு மாற்று வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என, பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனத்தை வலியுறுத்தி, நாகையில், 40 கிராம விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

நாகை அருகே பனங்குடியில் அமைந்துள்ள சி.பி.சி.எல்., எனும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், தொழிற்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, 40 கிராமங்களில், 694 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளது.கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை விலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்திற்கு அனுமதி இல்லை என, ஜூலை, 15ல் போலீசார் அறிவித்து, விவசாயிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை பிரித்தனர்.போராட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி பெற்ற விவசாயிகள், நேற்று முதல், சி.பி.சி.எல்., தொழிற்சாலை எதிரே காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதனால், ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X