வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடி:அமைச்சர் அசோக் தகவல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஹாசன்-''கர்நாடகா முழுதும், நிரந்தரமாக பெய்யும் மழையால், மக்களின் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வெ ள்ள நிவாரண பணிகளுக்காக, முதல்வர் பசவராஜ் பொம்மை 500 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்,'' என வருவாய்த்துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார்.ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:இயற்கை சீற்றத்தை சமாளிக்க, பணப்பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொண்டுள்ளோம். வருவாய்த்துறையில் புதிய

ஹாசன்-''கர்நாடகா முழுதும், நிரந்தரமாக பெய்யும் மழையால், மக்களின் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வெ ள்ள நிவாரண பணிகளுக்காக, முதல்வர் பசவராஜ் பொம்மை 500 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்,'' என வருவாய்த்துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார்.

ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:இயற்கை சீற்றத்தை சமாளிக்க, பணப்பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொண்டுள்ளோம். வருவாய்த்துறையில் புதிய கொள்கை செயல்படுத்தி, தனி மென்பொருள் பயன்படுத்தி, விளைச்சல் சேதப்பகுதிகளை விரைந்து ஆய்வு நடத்தி, இந்த மாதங்களுக்குள் நிவாரணம் வழங்கப்படும்.மாநிலம் முழுதும், பெய்யும் தொடர் மழையால், மக்களின் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வெ ள்ள நிவாரண பணிகளுக்காக, முதல்வர் பசவராஜ் பொம்மை 500 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.மேலும் மூன்று நாட்களில், முதல்வருடன் ஆலோசனை நடத்தி, நிவாரணம் வழங்கப்படும். இன்னும் ஒரு மாதத்தில், விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணம் வழங்கப்படும். 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்துவோம்.மழைக்காலத்தில் எங்கெங்கு வீடுகளில், மழைநீர் நுழைந்துள்ளதோ, அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். 15 நாட்களுக்கு போதுமான உணவு பொருட்கள் வழங்கப்படும்.மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், சுற்றுப்பயணம் செய்கின்றனர். அரசு சுறுசுறுப்பாக செயல்படுகிறது. அதிகாரிகளும், விடுமுறை போடாமல் மக்களுக்கு ஆதரவாக நின்று, நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு, கொண்டு வர வேண்டும்.

மாநிலத்தில், மொத்தம் 14 மாவட்டங்கள் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளன. 115 கிராமங்களில், வெள்ளம் சூழ்ந்துள்ளது. 14 ஆயிரத்து 902 பேர் தொந்தரவில் சிக்கியுள்ளனர். 64 பேர் மழைக்கு பலியாகினர். 15 ஆயிரத்து 74 வீடுகள் சேதமடைந்துள்ளன. 8,057 மக்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.மாநிலத்தின், 64 இடங்களில் மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் 6,933 மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறது. முட்டையும் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X