மைசூரு,-மைசூரில் ஐந்து நாட்களுக்கு முன், கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தவரை தாக்கி கொன்ற புலி, மீண்டும் வேறொருவரை தாக்கியதால், அதை பிடிக்க வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.மைசூரில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன், மாடு மேய்த்து கொண்டிருந்த புட்டசாமி ஹடனுார் என்பவரை புலி தாக்கி கொன்றது.இந்நிலையில், நஞ்சதேவர பெட்டாவில் இம்மாதம் 4ம் தேதி காலை கால்நடைகளை பிரசன்ன குமார், 40, என்பவர் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, பதுங்கியிருந்த புலி, அவரை தாக்கியது. இதை பார்த்த மற்றவர்கள், கூச்சலிட்டதால், அங்கிருந்து தப்பியோடினர்.படுகாயமடைந்த அவர், எச்.டி.கோட்டே அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், தொடர் மழையால், தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.கும்கி யானைகளான ரோஹிதா, கணேசா, சைத்ரா, பார்த்தசாரதி ஈடுபட்டுள்ளன. புலி நடமாட்டம் உள்ள பகுதிகளில் மூன்று கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.வனத்துறையினர் கூறுகையில், 'ஆக., 8 ம் தேதி முதல் 30 வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. புலியை பிடிக்கும் பணியில் 30 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்,' என்றார்.