கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு கிராமங்களை விட்டு வெளியேறும் மக்கள்| Dinamalar

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு கிராமங்களை விட்டு வெளியேறும் மக்கள்

Added : ஆக 05, 2022 | |
மயிலாடுதுறை:கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஆற்றுப்படுகை கிராமங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 1 லட்சத்து, 75 ஆயிரம் கன அடி தண்ணீர்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு கிராமங்களை விட்டு வெளியேறும் மக்கள்

மயிலாடுதுறை:கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஆற்றுப்படுகை கிராமங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 1 லட்சத்து, 75 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து, 2.5 லட்சம் கன அடியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, ஆணைக்காரன் சத்திரம், நாதல் படுகை, முதலை மேடு திட்டு, வெள்ள பள்ளம் உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அக்கிராமங்களில் குடியிருப்புகளிலும், வயல்வெளிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. தொடர்ந்து, கிராமத்தில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு, வருவாய் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுப்பணித்துறை சார்பில், 3,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் தண்ணீரால் சூழப்பட்ட கிராமங்களையும், அளக்குடியில் கரை சீரமைப்பு பணிகள் நடைபெறும் இடத்தையும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று பார்வையிட்டார்.அமைச்சர் மெய்யநாதன், ''கடந்த காலங்களில் உபரி நீர் திறக்கப்பட்ட போது ஏற்பட்ட பாதிப்புகள் இம்முறை ஏற்படாமல் தடுப்பதற்காக, அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,'' என்றார்.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!



கொள்ளிடம் ஆற்றில், 1 லட்சத்து, 75 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ளதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் சார்பில், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் ஆற்றில் இறங்க கூடாது என, கலெக்டர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.உத்தரவை, கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, 'தண்டோரா' அடித்தும், ஒலிபெருக்கி வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X