விவசாயி குடும்பத்திற்கு ரூ.9 லட்சம் இழப்பீடு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மதுரை:மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள், 'டிவி' ஒயர் அறுந்து, மின்சாரம் தாக்கியதில் விவசாயி பலியான விவகாரத்தில், அவரின் குடும்பத்திற்கு, 9 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மின் வாரியத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே மினிக்கியூர் லட்சுமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:விவசாயியான என் கணவர்

மதுரை:மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள், 'டிவி' ஒயர் அறுந்து, மின்சாரம் தாக்கியதில் விவசாயி பலியான விவகாரத்தில், அவரின் குடும்பத்திற்கு, 9 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மின் வாரியத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே மினிக்கியூர் லட்சுமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:விவசாயியான என் கணவர் பழனிசாமி, 48, கடந்த, 2016ல் வயலுக்குச் சென்றார். மின்கம்பத்தில் கட்டப்படிருந்த கேபிள், 'டிவி' ஒயர்​மின் ஒயர் மீது விழுந்து கிடந்தது. அந்த ஒயர், என் கணவரின் தலையில் விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

கணவர் மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார். எங்கள் குடும்பத்தில் வருவாய் ஈட்டிய ஒரே நபர் அவர் தான். எனக்கு இரண்டு மகன்கள். மின் வாரியத்தின் அலட்சியத்தால் விபத்து நடந்து உள்ளது.இழப்பீடு கோரி திருச்சி மின்வாரிய கண்காணிப்பு பொறியாளருக்கு மனு அனுப்பினேன்; நிராகரித்தார். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு:மின் வாரியத்திற்கு சொந்தமான மின் கம்பத்தில், கேபிள் டிவி ஒயர் கட்டப்பட்டிருந்தது சட்டப்படி ஏற்புடையதல்ல. கேபிள் டிவி ஒயரை அகற்ற, மின் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.விவசாயி மரண விபத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என்ற மின் வாரியத்தின் வாதம் சட்டப்படி ஏற்புடையதல்ல. மனுதாரருக்கு, 9 லட்சம் ரூபாயை இழப்பீடாக மின் வாரியம் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X