உ.பி.,யில் 50 பசுக்கள் பலி: விசாரணைக்கு உத்தரவு

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
லக்னோ-உத்தர பிரதேசத்தில் அரசு பராமரிப்பு மையத்தில் இருந்த 50 பசுக்கள் மர்மமான முறையில் இறந்ததால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசு சார்பில் முக்கிய நகரங்களில் பசுக்களை பராமரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு மையத்தில் நேற்று

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ-உத்தர பிரதேசத்தில் அரசு பராமரிப்பு மையத்தில் இருந்த 50 பசுக்கள் மர்மமான முறையில் இறந்ததால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



latest tamil news


உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசு சார்பில் முக்கிய நகரங்களில் பசுக்களை பராமரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு மையத்தில் நேற்று முன்தினம் தீவனம் சாப்பிட்ட பின், 50 பசுக்கள் மர்மமான முறையில் ஒன்றன்பின் ஒன்றாக இறந்தன.

இதையடுத்து, கால்நடை டாக்டர்கள் வந்து, பசுக்களை பரிசோதித்தனர். போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை துவக்கினர். பசுக்களுக்கு தீவனம் 'சப்ளை' செய்த தாஹிர் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பசு பராமரிப்பு மைய பொறுப்பாளரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.


latest tamil news


கால்நடைத் துறை அமைச்சரும் அம்ரோகா மாவட்டத்துக்கு விரைந்து உள்ளார். பசுக்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
06-ஆக-202205:33:56 IST Report Abuse
MARUTHU PANDIAR புரிஞ்சுதா? யாரு கிட்ட எதுக்காக எதை வாங்க வேண்டுமென்று? கொஞ்சம் உள்ள போய் தீர தான் விசாரித்தாகணும்+++++உ.பி.யிலேயே இப்படியா இது போல் எத்தனை ஹீரூக்கள் எந்தெந்த கோசாலைக்கெல்லாம் என்னென்ன சப்ளை பண்றங்கன்னு பாருங்க. ஐம்பது பசுக்களா? ஐயோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X