சர்க்கரை இனிக்கிற சர்க்கரை...ஓடுவதில் காட்டணும் அக்கறை!

Added : ஆக 05, 2022 | |
Advertisement
குறைந்த துாரத்தை அதிக வேகத்தில் கடப்பதை விட, அதிக துாரத்தை குறைந்த வேகத்தில் கடப்பது கூடுதல் பலன் அளிக்கும்.உடல் உழைப்பு இல்லாததே இந்தியாவும், தெற்காசிய நாடுகளும் சர்க்கரை நோயின் தலைநகரமானதற்கு காரணம். அவசர உலகில் அன்றாடம் செய்யும் செயல்களை நிதானமாகவோ, மெதுவாகவோ மேற்கொள்ள முடியாது. இது தான் நிதர்சனமான உண்மை. இதற்கு ஒரே தீர்வு நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும்
சர்க்கரை இனிக்கிற சர்க்கரை...ஓடுவதில் காட்டணும் அக்கறை!

குறைந்த துாரத்தை அதிக வேகத்தில் கடப்பதை விட, அதிக துாரத்தை குறைந்த வேகத்தில் கடப்பது கூடுதல் பலன் அளிக்கும்.

உடல் உழைப்பு இல்லாததே இந்தியாவும், தெற்காசிய நாடுகளும் சர்க்கரை நோயின் தலைநகரமானதற்கு காரணம். அவசர உலகில் அன்றாடம் செய்யும் செயல்களை நிதானமாகவோ, மெதுவாகவோ மேற்கொள்ள முடியாது. இது தான் நிதர்சனமான உண்மை. இதற்கு ஒரே தீர்வு நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் தான்.

மாரத்தான் எனப்படும் நீண்ட துாரம் ஓடுபவர்களின் இருதயத்தின் வேலைத்திறன் அதிகரித்து, கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பு அதிகரிப்பதால், ஆயுட்காலம் கூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.நுண்ணிய ரத்தநாளங்களில் அடைப்பு வராமல் பாதுகாக்கிறது.இருதயம் மட்டுமின்றி அனைத்து பாகங்களிலும் உள்ள ரத்த நாளங்களில் கொழுப்பு அடைக்காமல் பாதுகாக்கிறது.

எலும்புப்புரை, மூட்டுவலி அணுகாது.நுரையீரல் முழுமையாக சுருங்கி விரிவதால், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், அலர்ஜி, மலச்சிக்கல், செரிமான பிரச்னை வராது.சர்க்கரை நோய் பாதிப்பு வராமல் உடலை பாதுகாக்கலாம். தசை நார்கள் பலமுடன் இருக்க உதவுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதன் அளவை கட்டுப்படுத்துகிறது.

'இன்சுலின்' செயல்திறனை அதிகரிக்கிறது.தன்னம்பிக்கையை வளர்க்கிறது. நம்மால் முடியும் என்ற நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தி மனஅழுத்தத்தை குறைக்கிறது.மாரத்தான் ஓட்டத்தால் இரவு துாக்கம் நன்றாக வருகிறது என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளமில்லா சுரப்பிகளை பொருத்தவரை, 'என்டார்பின், டோபமைன்' போன்ற மகிழ்ச்சிக்குரிய சுரப்பிகள் அதிகமாக சுரக்கிறது.மாரத்தான் ஓட்டத்தின் போது, எத்தனை கி.மீ., ஓடப் போகிறோம் என, முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உங்களின் உடல் நிலையும், மனநிலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய், இருதயநோய், மூட்டு பிரச்னை உள்ளவர்கள் டாக்டர் ஆலோசனைபடி மாரத்தான் நீளத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். மாரத்தானில் முதலில் வருவது மட்டும் வெற்றியல்ல. கலந்து கொள்வதே வெற்றி தான்.

டாக்டர் ஜெ.சங்குமணி,

முதல்வர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X