கரும்பு டன்னுக்கு ரூ.5,000 விவசாயிகள் கோரிக்கை

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
நெல்லிக்குப்பம் : கரும்பு டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் அறிவிக்க வேண்டும் என, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் அறிக்கை;2022-2023ம் பருவத்தில் 10.25 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்பு டன் ஒன்றுக்கு 3,050 ரூபாய், 9.5 பிழிதிறன் கொண்ட கரும்புக்கு 2,821 ரூபாய் விலை மத்திய அரசு அறிவித்துள்ளது.டீசல், உரம், ஆட் கூலி உயர்வால் கரும்பு

நெல்லிக்குப்பம் : கரும்பு டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் அறிவிக்க வேண்டும் என, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் அறிக்கை;2022-2023ம் பருவத்தில் 10.25 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்பு டன் ஒன்றுக்கு 3,050 ரூபாய், 9.5 பிழிதிறன் கொண்ட கரும்புக்கு 2,821 ரூபாய் விலை மத்திய அரசு அறிவித்துள்ளது.டீசல், உரம், ஆட் கூலி உயர்வால் கரும்பு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு கடந்த ஆண்டை விட 71 ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ளது.

9 சதவீதமாக இருந்த பிழிதிறனை கணக்கில் கொண்டு விலை அறிவித்து வந்த நிலையில் அதை 2018ம் ஆண்டு 10 சதவீதம், தற்போது 10.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பிழிதிறன் அளவை 1.25 சதவீதம் உயர்த்தியது விவசாயிகளுக்கு பாதகமான செயல். பிழிதிறனை குறைக்க வேண்டும்.வருவாய் பங்கீட்டு முறைப்படி கரும்புக்கு விலை நிர்ணயம் செய்திட மத்திய அரசு முயல்கிறது.

இதை எதிர்த்து விவசாயிகள் ஒற்றுமையாக போராட வேண்டும். உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதை கணக்கில் கொண்டு கரும்பு டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் விலை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
07-ஆக-202200:40:41 IST Report Abuse
Fastrack அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாதா ...ஒரு கிளாஸ் கரும்பு சாறு 400 ரூபாய் அதாவது ஐந்து டாலர் . எதனால் மற்றும் ஆல்கஹால் தயாரித்து ஏற்றுமதி செய்ய வாய்ப்பில்லையா ..சக்கைகளால் மின்சாரம் தயாரிக்கலாமே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X