மூவர் கொலை: 27 பேருக்கு 'ஆயுள்'

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சிவகங்கை:கச்சநத்தம் மூவர் கொலை வழக்கில், 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கருப்பர் கோவிலில், 2018ல் நடந்த விழாவில், முதல் மரியாதையை பெறுவதில் ஏற்பட்ட இரு தரப்பு மோதலில், சண்முகநாதன், 31; ஆறுமுகம், 65; சந்திரசேகர், 34, ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.மேலும், 18 வயது முதல், 50 வயது வரையிலான ஐவர் காயமுற்றனர். பழையனுார் போலீசார் கச்சநத்தம் சுமன், 23,
மூவர் கொலை: 27 பேருக்கு 'ஆயுள்'

சிவகங்கை:கச்சநத்தம் மூவர் கொலை வழக்கில், 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கருப்பர் கோவிலில், 2018ல் நடந்த விழாவில், முதல் மரியாதையை பெறுவதில் ஏற்பட்ட இரு தரப்பு மோதலில், சண்முகநாதன், 31; ஆறுமுகம், 65; சந்திரசேகர், 34, ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

மேலும், 18 வயது முதல், 50 வயது வரையிலான ஐவர் காயமுற்றனர். பழையனுார் போலீசார் கச்சநத்தம் சுமன், 23, அருண்குமார், 21, உட்பட 33 பேர் மீது வழக்கு பதிந்தனர்.இவ்வழக்கில் தொடர்புடைய இருவர் இறந்து விட்டனர். சிறார் மூவர், தலைமறைவான சுள்ளான் கருப்பையா, 28, ஆகிய ஆறு பேர் தவிர்த்து, 27 பேர் மீதான விசாரணை, சிவகங்கை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் நடந்தது.நீதிபதி முத்துக்குமரன், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை, தலா, 49 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X