உக்ரைனில் பயின்ற மருத்துவ மாணவர்கள் படிப்பைத் தொடர அனுமதி வழங்க வேண்டும்: லோக்சபாவில் எம்.பி., வலியுறுத்தல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : போரினால் உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், தமிழகத்தில் படிப்பைத் தொடர மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என கவுதம சிகாமணி எம்.பி., வலியுறுத்தி பேசினார்.லோக்சபாவில் அவர் பேசியதாவது:தமிழகத்திலிருந்து உக்ரைனுக்கு உயர்க்கல்வி (பொறியியல் மற்றும் மருத்துவம்) படிக்கச் சென்ற 2,000 மாணவர்கள் போரினால் பாதிக்கப்பட்டு கடந்த மார்ச் 2022ல்

கள்ளக்குறிச்சி : போரினால் உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், தமிழகத்தில் படிப்பைத் தொடர மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என கவுதம சிகாமணி எம்.பி., வலியுறுத்தி பேசினார்.

லோக்சபாவில் அவர் பேசியதாவது:தமிழகத்திலிருந்து உக்ரைனுக்கு உயர்க்கல்வி (பொறியியல் மற்றும் மருத்துவம்) படிக்கச் சென்ற 2,000 மாணவர்கள் போரினால் பாதிக்கப்பட்டு கடந்த மார்ச் 2022ல் தமிழகம் திரும்பினர்.பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு பொறியியல் கல்லுாரிகளில் படிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் மருத்துவக்கல்லுாரி மாணவர்களின் ஏதிர்காலம் இருண்டது.கல்லுாரி மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் 6 மாதங்களாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தமிழகத்தில் தங்களது படிப்பைத் தொடர தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி இல்லை என மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.தங்கள் மூலம் மீண்டும் ஒரு முறை தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடர தேசிய மருத்துவ ஆணையத்தை அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இதன் மூலம் அவர்கள் தங்களது கல்வியை தொடரலாம். இவ்வாறு தெய்வசிகாமணி எம்.பி., பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X