ஆற்றில் வீசி 3 குழந்தைகள் கொலை தற்கொலைக்கு முயன்ற தாய் சீரியஸ்| Dinamalar

ஆற்றில் வீசி 3 குழந்தைகள் கொலை தற்கொலைக்கு முயன்ற தாய் 'சீரியஸ்'

Added : ஆக 05, 2022 | |
தண்டராம்பட்டு:தென்பெண்ணை ஆற்றில் மூன்று குழந்தைகளை வீசி கொலை செய்து விட்டு, தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அடுத்த வேப்பூர் செக்கடிகிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி பரசுராமன், 30; இவரது மனைவி அமுதா, 27. இவர்களுக்கு நிலவரசு, 5, குறளரசு, 3, ஆகிய ஆண் குழந்தைகளும், யாசினி என்ற எட்டு மாத பெண் குழந்தையும்

தண்டராம்பட்டு:தென்பெண்ணை ஆற்றில் மூன்று குழந்தைகளை வீசி கொலை செய்து விட்டு, தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அடுத்த வேப்பூர் செக்கடிகிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி பரசுராமன், 30; இவரது மனைவி அமுதா, 27. இவர்களுக்கு நிலவரசு, 5, குறளரசு, 3, ஆகிய ஆண் குழந்தைகளும், யாசினி என்ற எட்டு மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

நேற்று காலை, பரசுராமன் - அமுதா இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த அமுதா, வாழவச்சனுார் மேலானந்தல் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில், மதியம், 1:30 மணி அளவில், மூன்று குழந்தைகளையும் ஆற்றில் வீசி, தானும் குதித்தார்

.அவ்வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடன் ஆற்றில் குதித்து, நான்கு பேரையும் காப்பாற்ற முயன்றனர்.ஆனாலும், மூன்று குழந்தைகளும் பலியான நிலையிலேயே மீட்கப்பட்டனர்.

அமுதா கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X