பா.ஜ., நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி டிரைவரை மிரட்டி பணம் கேட்டதாக, பா.ஜ., நிர்வாகிகள் ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரைச் சேர்ந்தவர் பாண்டி, 40; லாரி டிரைவர். இவர், ஆந்திராவில் மாடுகளை லாரியில் ஏற்றி, பொள்ளாச்சி நோக்கிச் சென்றார்.உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே சென்றபோது, பா.ஜ., நிர்வாகிகள் லாரியை

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி டிரைவரை மிரட்டி பணம் கேட்டதாக, பா.ஜ., நிர்வாகிகள் ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரைச் சேர்ந்தவர் பாண்டி, 40; லாரி டிரைவர். இவர், ஆந்திராவில் மாடுகளை லாரியில் ஏற்றி, பொள்ளாச்சி நோக்கிச் சென்றார்.உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே சென்றபோது, பா.ஜ., நிர்வாகிகள் லாரியை நிறுத்த முயன்றனர்.ஆனால் லாரி நிற்காமல் சென்றதால், லாரியை பைக்கில்விரட்டிச் சென்று, ஷேக் உசேன்பேட்டையில் நிறுத்தி மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து லாரி டிரைவர் பாண்டி, தன்னிடம் பணம் கேட்டு மிரட்டி, தாக்கியதாக எடைக்கல் போலீசில் புகார் அளித்தார்.அதன்படி, பா.ஜ., இலக்கிய மற்றும் தமிழர் நல மாவட்ட தலைவர் சவுந்தரராஜன், நகர துணைத் தலைவர் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் இளையராஜா உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X