இரு தரப்பினர் மோதல்4 பேர் மீது வழக்கு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ரிஷிவந்தியம் : பாசாரில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் ராதாகிருஷ்ணன், 37; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன், 61; இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வருகிறது.கடந்த 1ம் தேதி மாலை ராதாகிருஷ்ணன் குடும்ப சண்டையில் மனைவி ேஹமலதாவை திட்டியுள்ளார். இதில்

ரிஷிவந்தியம் : பாசாரில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் ராதாகிருஷ்ணன், 37; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன், 61; இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வருகிறது.கடந்த 1ம் தேதி மாலை ராதாகிருஷ்ணன் குடும்ப சண்டையில் மனைவி ேஹமலதாவை திட்டியுள்ளார். இதில் தன்னைத்தான் திட்டுகிறார் என நினைத்த வீரன் மற்றும் அவரது மனைவி ஜெயக்கொடி ஆகியோர் ராதாகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில், இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், வீரன், ஜெயக்கொடி, ராதாகிருஷ்ணன், ேஹமலதா ஆகிய 4 பேர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின் றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X