மத்திய அரசை கண்டித்து முற்றுகை; காங்., கட்சியினர் 50 பேர் கைது

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி, : மத்திய அரசை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்., கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.மாவட்ட காங்., சார்பில் கள்ளக்குறிச்சியில், அஞ்சல் அலுவலகம் மற்றும் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நேற்று முற்றுகைப் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா, நகர தலைவர் குமார், கவுன்சிலர் தேவராஜ்,

கள்ளக்குறிச்சி, : மத்திய அரசை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்., கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காங்., சார்பில் கள்ளக்குறிச்சியில், அஞ்சல் அலுவலகம் மற்றும் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நேற்று முற்றுகைப் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா, நகர தலைவர் குமார், கவுன்சிலர் தேவராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, முத்தமிழ்ச்செல்வி, துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், இளைஞர் காங்., மாதேஸ்வரன், கலியமூர்த்தி, இளையபெருமாள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

போராட்டத்தில், காங்., தலைவர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து சோனியா, ராகுல் ஆகியோருக்கு கடும் நெருக்கடி கொடுப்பதை கண்டிப்பது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டிப்பது. பொருளாதார நிலையைக் கட்டுப்படுத்தத் தவறியதை கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X