ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் பள்ளியில் கருத்தரங்கம், வினாடி வினா போட்டி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : இந்திலி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் பள்ளியில் கணிதவியல் கருத்தரங்கம் மற்றும் வினாடி, வினா போட்டி நடந்தது.கணிதவியலாளர் ஹாமில்டன் பிறந்த நாளை முன்னிட்டு ராமானுஜம் மன்றத்தின் சார்பில் நடந்த கருத்தரங்கம் மற்றும் வினாடி, வினா போட்டிக்கு, நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கணித ஆசிரியை புவனேஸ்வரி வரவேற்றார். ஆர்.கே.எஸ்., கல்லுாரி கணிதத் துறை தலைவி

கள்ளக்குறிச்சி : இந்திலி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் பள்ளியில் கணிதவியல் கருத்தரங்கம் மற்றும் வினாடி, வினா போட்டி நடந்தது.

கணிதவியலாளர் ஹாமில்டன் பிறந்த நாளை முன்னிட்டு ராமானுஜம் மன்றத்தின் சார்பில் நடந்த கருத்தரங்கம் மற்றும் வினாடி, வினா போட்டிக்கு, நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கணித ஆசிரியை புவனேஸ்வரி வரவேற்றார். ஆர்.கே.எஸ்., கல்லுாரி கணிதத் துறை தலைவி நர்கீஸ்பேகம், கணிதத்தின் பயன்பாடு குறித்தும், மாணவர்கள் கணிதத்தில் அதிக ஈடுபாட்டோடு இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பள்ளி முதல்வர் மாலதி, கல்லுாரி பேராசிரியர்கள் பூங்கொடி சத்யா, ஜனனி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். துணை முதல்வர் உலகநாதன் வினாடி, வினா போட்டியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பாரதி, ஜாய்ஸ் மேரி செய்திருந்தனர். பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். போட்டியியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆசிரியர் ரோஜிட்டா நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X