முல்லைப் பெரியாறில் மழை ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சென்னை:'முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்துள்ளதால், அணைக்கு வரும் நீரின் அளவை விட, கூடுதல் நீரை வெளியேற்ற வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:கேரள மாநிலத்தில், கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், இடுக்கி உட்பட பல

சென்னை:'முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்துள்ளதால், அணைக்கு வரும் நீரின் அளவை விட, கூடுதல் நீரை வெளியேற்ற வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:கேரள மாநிலத்தில், கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், இடுக்கி உட்பட பல மாவட்டங்களுக்கு, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம், 136 அடியை நெருங்கி உள்ளது. அணைக்கு அதிகப்படியான நீர் வரத்து உள்ளதால், அணை நீர் மட்டம் திடீரென உயர வாய்ப்புள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக குறைக்க வேண்டும். நீர் வரத்தை விட அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
ஏனெனில், முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில், அதிக மழை பெய்துள்ளது. மேலும், முல்லைப் பெரியாறு அணை மதகுகளை திறப்பதற்கு, 24 மணி நேரத்துக்கு முன், கேரள அரசுக்கு தெரியப்படுத்தவும். அப்போது தான் அணையின் கீழ் பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X