'பாலிவுட்' நடிகைக்கு எதிரான வழக்கு: ம.பி., அரசை இணைத்து கோர்ட் உத்தரவு

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஜபல்பூர்-'பாலிவுட்' நடிகை கரீனா கபூர் கானுக்கு எதிரான வழக்கில், மத்திய பிரதேச அரசையும் இணைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான், 41, குழந்தை பெற்ற பின், தன் கர்ப்ப கால அனுபவங்களை புத்தகமாக எழுதினார். மேல்முறையீடுஅந்த புத்தகத்துக்கு, 'கரீனா கபூர் கான்ஸ் ப்ரெக்னன்சி பைபிள்' என பெயரிட்டார். இவரது கர்ப்பத்தை கிறிஸ்துவர்களின் புனித

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜபல்பூர்-'பாலிவுட்' நடிகை கரீனா கபூர் கானுக்கு எதிரான வழக்கில், மத்திய பிரதேச அரசையும் இணைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான், 41, குழந்தை பெற்ற பின், தன் கர்ப்ப கால அனுபவங்களை புத்தகமாக எழுதினார்.latest tamil news


மேல்முறையீடு

அந்த புத்தகத்துக்கு, 'கரீனா கபூர் கான்ஸ் ப்ரெக்னன்சி பைபிள்' என பெயரிட்டார். இவரது கர்ப்பத்தை கிறிஸ்துவர்களின் புனித நுாலான பைபிளுடன் ஒப்பிடுவது, மத உணர்வை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. நடிகை கரீனா கபூர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு, ம.பி.,யின் ஜபல்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஆன்டனி என்பவர் புகார் அளித்தார்.

போலீசார் நடவடிக்கை எடுக்காததை அடுத்து, ஜபல்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். புத்தகத்தின் தலைப்பு மத உணர்வை எவ்வாறு புண்படுத்துகிறது என்பதை மனுதாரர் தெளிவுபடுத்த தவறியதை அடுத்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, செஷன்ஸ் கோர்ட்டை நாடினார். அங்கு மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, ம.பி., உயர் நீதிமன்றத்தில் ஆன்டனி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் புத்தகத்தின் இணை ஆசிரியர் ஷா பிம்ஜ்யானி, 'ஜக்கர்னாட் புக்ஸ், அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்' நிறுவனங்கள் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுஉள்ளனர்.


latest tamil newsகோரிக்கை

மேலும், ம.பி., அரசையும் பிரதிவாதியாக சேர்க்க மனுதாரர் ஆன்டனி கோரிக்கை விடுத்தார்.இதை ஏற்று, ம.பி., அரசை வழக்கில் இணைத்து உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
06-ஆக-202209:07:30 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தனது புத்தகம் நன்கு விற்கப்படவேண்டும் ........ அதற்கு நல்ல பப்ளிசிட்டி தேவை ...... என்பதற்காக நடிகையே ஏன் வழக்குப்போட ஏற்பாடு செய்திருக்கக் கூடாது ......
Rate this:
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
06-ஆக-202208:20:54 IST Report Abuse
S Ramkumar முக்கியமான அந்த துறை சார்ந்த புத்தகங்களை பைபிள் ஆப் என்று குறிப்பிடுவார்கள். கிருத்துவர்கள் அடுத்த மத தெய்வங்களை எவ்வளவோ முறை நிந்தித்து இருக்கிறார்கள் இருக்கின்றனர். இப்ப அவர்களுக்கு என்றவுடன் குத்துத்து.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-ஆக-202206:54:12 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த பிரச்சினையில் மத்திய பிரதேச அரசுக்கு சம்பந்தமே இல்லாதபோது அதை ஏன் இணைக்க வேண்டும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X