போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் காவல்துறை சார்பில்நடந்தது.சப் இன்ஸ்பெக்டர் சந்திரவேல், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் பேசுகையில், 'இளைஞர்கள் போதை பொருட்களை தேடி செல்வது அதிகரித்து வருகிறது.இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. போதை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் காவல்துறை சார்பில்நடந்தது.

சப் இன்ஸ்பெக்டர் சந்திரவேல், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் பேசுகையில், 'இளைஞர்கள் போதை பொருட்களை தேடி செல்வது அதிகரித்து வருகிறது.இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. போதை பொருட்களை பயன்படுத்துவதால் மனநலம் பாதிப்பதோடு, தற்கொலை சம்பவங்களும் நடக்கிறது. எனவே, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

போதை பொருட்கள் விற்போர் பற்றிய தகவல் கிடைத்தால் 99446618 47,9498153984 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.தகவல் கொடுப்போரின் விபரங்கள் பாதுகாக்கப்படும்' என்றனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X