பைக் - மொபட் மோதல்: சிறுவன் பலி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே பைக் - மொபட் மோதிய விபத்தில் சிறுவன் இறந்தார்.தியாகதுருகம் காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் மகன் சிவராமன், 16; தனசேகரன் மகன் நிதீஷ்,17; சண்முகம் மகன் சூர்யா, 17; மூவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு 3 பேரும், பைக்கில் வட சிறுவள்ளூரிலிருந்து தியாகதுருகம் நோக்கிச் சென்றனர். பைக்கை சிவராமன் ஓட்டினார்.கலையநல்லுார் அருகே சென்றபோது

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே பைக் - மொபட் மோதிய விபத்தில் சிறுவன் இறந்தார்.

தியாகதுருகம் காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் மகன் சிவராமன், 16; தனசேகரன் மகன் நிதீஷ்,17; சண்முகம் மகன் சூர்யா, 17; மூவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு 3 பேரும், பைக்கில் வட சிறுவள்ளூரிலிருந்து தியாகதுருகம் நோக்கிச் சென்றனர். பைக்கை சிவராமன் ஓட்டினார்.கலையநல்லுார் அருகே சென்றபோது முகப்பு விளக்கு எரியாமல் எதிரில் வந்த மொபட் மீது பைக் மோதியது. இதில் பைக்கில் வந்த மூவர் மற்றும் மொபட்டில் வந்த கலையநல்லுார் சுந்தரமூர்த்தி மகன் பிரவீன்குமார், 21; ராஜமாணிக்கம் மகன் ராஜதுரை, 26 ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், சிவராமன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X