மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சிதம்பரம் : மத்திய அரசின் விலைவாசி உயர்வு மற்றும் அமலாக்கத் துறையை கண்டித்து மாவட்டத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிதம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கவுன்சிலர் மக்கின் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெமினி ராதா வரவேற்றார். சம்பந்த மூர்த்தி, வெங்கடேசன், சிவசக்தி ராஜா, ஷாஜகான், குமரவேல் முன்னிலை வகித்தனர்.மாநில செயலாளர் சித்தார்த்தன், முன்னாள்

சிதம்பரம் : மத்திய அரசின் விலைவாசி உயர்வு மற்றும் அமலாக்கத் துறையை கண்டித்து மாவட்டத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிதம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கவுன்சிலர் மக்கின் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெமினி ராதா வரவேற்றார். சம்பந்த மூர்த்தி, வெங்கடேசன், சிவசக்தி ராஜா, ஷாஜகான், குமரவேல் முன்னிலை வகித்தனர்.மாநில செயலாளர் சித்தார்த்தன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் விசுவநாதன், மாவட்ட துணைத் தலைவர்கள் குமார், சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளர்கள் நெல்சன், சின்ராஜ், ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். நகர செயல் தலைவர் குமார் நன்றி கூறினார்.

புவனகிரி
புவனகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சேர்மன் கோவி பழனிச்சாமி தலைமை தாங்கினார். சம்பத் வரவேற்றார். நிர்வாகிகள் சண்முகம், செல்வராஜ், ராஜாராம், பன்னீர்செல்வம், பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், மாநில செயலாளர் சேரன், மூத்த நிர்வாகி சவுந்தரபாண்டியன், விவசாயப்பிரிவு குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.கீரப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர்கள் பழனிவேல், செழியன் தலைமை தாங்கினர். கீரப்பாளையம் கிராம கமிட்டித் தலைவர் வெள்ளை பார்த்திபன் வரவேற்றார். நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சேகர், அன்பரசன், ஊராட்சி தலைவர் கீரன் முன்னிலை வகித்தனர். ஐ.என்.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் சாம்பமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் புஷ்பராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

சேத்தியாத்தோப்பு
சேத்தியாதோப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, புவனகிரி வட்டார காங்., தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர தலைவர்கள் அறிவழகன், கனகபிச்சைபிள்ளை, தொகுதி துணைத்தலைவர் விஜயராஜ் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் விஜய், எழில், மனோஜ், பூவரசன், ஆனந்த், வசந்த், சசி பாலமுருன் உட்பட பலர் பங்கேற்றனர். பாலமுருகன் நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X