விவசாயிகள் மானியம் பெற இணையதள பதிவு அவசியம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மானியம் பெற இணைய தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குனர் இந்திரா செய்திக்குறிப்பு:தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், கலைஞரின் அனைத்து கிராம

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மானியம் பெற இணைய தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குனர் இந்திரா செய்திக்குறிப்பு:தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் இந்த ஆண்டு செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டங்கள் அனைத்தும் 2022-23ம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு மானியங்களும் வழங்கப்படுகிறது.இதற்காக விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/ என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யத் தெரியாத, இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத் தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன் பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X