ரிஷிவந்தியம் அரசு கல்லூரியில் கலந்தாய்வு 10ம் தேதி துவக்கம்| Dinamalar

ரிஷிவந்தியம் அரசு கல்லூரியில் கலந்தாய்வு 10ம் தேதி துவக்கம்

Added : ஆக 05, 2022 | |
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் வரும் 10ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் ரேவதி செய்திக்குறிப்பு:ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2022-23ம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்புக்கான கலை மற்றும் அறிவியல், வணிகவியல் முதலாமண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 10ம் தேதி முதல் நடக்கிறது.அன்று சிறப்பு

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் வரும் 10ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.

கல்லுாரி முதல்வர் ரேவதி செய்திக்குறிப்பு:ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2022-23ம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்புக்கான கலை மற்றும் அறிவியல், வணிகவியல் முதலாமண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 10ம் தேதி முதல் நடக்கிறது.அன்று சிறப்பு ஒதுக்கீடான (ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை, அந்தமான் - நிகோபர் தீவு அகதிகள்) ஆகியோர்களுக்கு நடக்கிறது.

தொடர்ந்து 11ம் தேதி பி.எஸ்சி., புள்ளியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு, 12ம் தேதி வணிகவியல், 16ம் தேதி பொருளாதாரம், 17ம் தேதி தமிழ் பாடப்பிரிவு ஆகியவற்றிற்கு கலந்தாய்வு நடக்கிறது.கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் விண்ணப்பத்தின் நகலுடன் அசல் மாற்று சான்றிதழ் மற்றும் 2 நகல்கள், 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் 2 நகல் எடுத்து வர வேண்டும். மேலும் அசல் ஜாதி சான்றிதழ் மற்றும் 2 நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் பிரதி, 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை கொண்டு வர வேண்டும்.

மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து தங்களது பெற்றோருடன் கலந்தாய்வில் காலை 9:30 மணிக்கு பங்கேற்க வேண்டும்.தாமதமாக வருகை புரியும் மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க இயலாது.கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை பெற்ற மாணவர்கள் அன்றே கட்டணத்தை செலுத்த வேண்டும். சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் குறித்து கல்லுாரி இணையதளம் www.gascrishivandiyam.in மூலம் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X