நீலமங்கலம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : போக்குவரத்து மிகுதியான நீலமங்கலம் - கூத்தக்குடி சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் - கூத்தக்குடி சாலை வழியாக நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பலர் இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். சாலையில் மின் விளக்குகள்

கள்ளக்குறிச்சி : போக்குவரத்து மிகுதியான நீலமங்கலம் - கூத்தக்குடி சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் - கூத்தக்குடி சாலை வழியாக நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பலர் இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் கும்மிருட்டாக காணப்படுகிறது.சாலையின் இருபுறமும் வயல்வெளி பகுதி என்பதால் பாம்பு, நண்டுவாக்களி உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இரவு நேரங்களில் சாலையை கடக்கிறது.

வாகன போக்குவரத்து மிகுதியான இச்சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் ஏற்படுவதற்கான சூழ்நிலையும் உள்ளது.இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இச்சாலையில் மின் விளக்குகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்ககோரி கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.எனவே போக்குவரத்து அதிகமாக உள்ள நீலமங்கலம் சாலையில் மின் விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X