நிறுத்தப்பட்ட உதவித் தொகை மீண்டும் வழங்க வலியுறுத்தல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
திட்டக்குடி : கடலுார் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை;கடலுார் மாவட்டத்தில் தமிழக அரசு வழங்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவை உள்ளிட்ட 18 ஆயிரம் பயனாளிகளின் உதவித்தொகை முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது.உதவித்தொகையை நம்பி

திட்டக்குடி : கடலுார் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை;கடலுார் மாவட்டத்தில் தமிழக அரசு வழங்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவை உள்ளிட்ட 18 ஆயிரம் பயனாளிகளின் உதவித்தொகை முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது.உதவித்தொகையை நம்பி ஜீவனம் செய்து வந்த முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 18 ஆயிரம் பேருக்கும் மீண்டும் உதவித்தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X