4 மாதங்களாக சம்பளம் வழங்காத அவலம்; தற்காலிக டேங்க் ஆப்பரேட்டர்கள் அதிருப்தி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : சங்கராபுரம் வட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தற்காலிக டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்காததால் அதிருப்தியில் குடிநீர் விநியோகம் செய்வதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.சங்கராபுரம் தாலுகாவில் உள்ள 48 ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வழங்க தற்காலிக டேங்க் ஆப்பரேட்டர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு

மூங்கில்துறைப்பட்டு : சங்கராபுரம் வட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தற்காலிக டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்காததால் அதிருப்தியில் குடிநீர் விநியோகம் செய்வதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.

சங்கராபுரம் தாலுகாவில் உள்ள 48 ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வழங்க தற்காலிக டேங்க் ஆப்பரேட்டர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 2,000 முதல் 5,000 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் டேங்க் ஆப்பரேட்டர்கள் அதிருப்தியடைந்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சுணக்கம் காட்டுகின்றனர்.

இதனால், பல ஊராட்சிகளில் குடிநீர் கிடைக்காததால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்காலிக பணியாளர்களிடம் கேட்டால், எங்களுக்கு மாதம் தோறும் ஊராட்சி நிர்வாகம் சரியான முறையில் ஊதியம் வழங்குவதில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் போய் கேளுங்கள் என கூறுகின்றனர்.

சம்பளம் வழங்காததால் டேங்க் ஆப்பரேட்டர்கள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு மாதம்தோறும் முறையாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X