ரூ.27 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு; 15 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுாரில் ரூ. 27 கோடியில், 272 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம், 15 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கடலுார் செம்மண்டலம் பகுதியில், 117 மறுகட்டுமான பயனாளிகளுக்கு கருணைத்தொகை மற்றும் தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வழங்கும் விழா, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.வேளாண்

கடலுார் : கடலுாரில் ரூ. 27 கோடியில், 272 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம், 15 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கடலுார் செம்மண்டலம் பகுதியில், 117 மறுகட்டுமான பயனாளிகளுக்கு கருணைத்தொகை மற்றும் தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வழங்கும் விழா, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் பாலசுப்ரமணியம் வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண் இயக்குனர் கோவிந்தராவ், திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், பயனாளிகளுக்கு கருணை தொகை மற்றும் ஒதுக்கீடு ஆணை வழங்கி பேசியதாவது;கடலுார் செம்மண்டலத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்ட ரூ. 27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு குடியிருப்பு ரூ. 9.96 லட்சத்தில் தரமாக கட்டப்படுகிறது.

மத்திய அரசு பங்கு மானியமாக ரூ.1.50 லட்சம், மாநில அரசு மானியமாக ரூ. 7.00 லட்சம் வழங்குகிறது. 272 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் 15 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். பயனாளிகளின் பங்களிப்பு ரூ. 60 ஆயிரம் ஆகும்.துறை சார்ந்த வல்லுநர்கள் மேற்பார்வையில் தரமாக கட்டப்படும்' என்றார்.நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், எஸ்.பி., சக்திகணேசன், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X