உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் முற்றுகையால் பரபரப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாததால் கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் தங்களது பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு வியாபாரிகள் நேரடியாக பணம் பட்டுவாடா செய்த போது

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாததால் கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் தங்களது பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு வியாபாரிகள் நேரடியாக பணம் பட்டுவாடா செய்த போது உடனடியாகவும், ஓரிரு நாட்களிலேயே பணம் கிடைத்தது.ஆனால், விவசாயிகள் தங்களது பொருட்களை கமிட்டியில் விற்பனைக்காக வைத்தவுடன் அவர்களுக்கு பணம் பட்டுவாடா நேரடியாக வழங்காமல் வங்கிகள் மூலம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

இதனால், விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.இதனை கமிட்டி நிர்வாகமும் கண்டு கொள்ளாததால் ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.இதனால், விவசாயிகள் தினமும் மார்க்கெட் கமிட்டிக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.ஆத்திரமடைந்த விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4:30 மணியளவில் கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டு நிர்வாக அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என கமிட்டி நிர்வாக அலுவலர்களிடம் எச்சரித்து விவசாயிகளை சமரசம் செய்து அனுப்பி வைத்தார். அதன் பிறகு, மாலை 5:30 மணிக்கு விவசாயிகள் கலைந்து சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X