இளைஞர் திறன் வளர்ப்பு திருவிழா | Dinamalar

இளைஞர் திறன் வளர்ப்பு திருவிழா

Added : ஆக 05, 2022 | |
வடலுார், : வடலுாரில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நடந்த இளைஞர் திறன் வளர்ப்பு திருவிழாவில் தொழில் திறன் பயிற்சி சேர்க்கைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் முன்னிலை வைத்தார். மகளிர் திட்ட இணை இயக்குனர் செந்தில் வடிவு வரவேற்றார்.நிகழ்ச்சியில் வேளாண்

வடலுார், : வடலுாரில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நடந்த இளைஞர் திறன் வளர்ப்பு திருவிழாவில் தொழில் திறன் பயிற்சி சேர்க்கைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் முன்னிலை வைத்தார். மகளிர் திட்ட இணை இயக்குனர் செந்தில் வடிவு வரவேற்றார்.நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், பயிற்சி சேர்க்கைக்கான சான்றிதழ் வழங்கி பேசினார். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 1,222 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

21 பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று, 322 பேருக்கு சான்றிதழ் வழங்கியது. குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், நாராயணசாமி, வடலுார் நகராட்சி சேர்மன் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், துணை சேர்மன் சுப்புராயலு உட்பட பலர் பங்கேற்றனர். உதவி திட்ட அலுவலர் கஸ்பர் அருள் மரிய ராஜா நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X