அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்! 3,200 இடத்திற்கு 34,200 பேர் விண்ணப்பம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் அரசு கல்லுாரிகளில் சேர, மொத்தமுள்ள 3,200 இடங்களுக்கு, 34,200 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.தமிழகத்தில் பிளஸ் 2 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், உயர் படிப்புகளில் சேர்க்கை துவங்கியுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை துவக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் அரசு கல்லுாரிகளில் சேர, மொத்தமுள்ள 3,200 இடங்களுக்கு, 34,200 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், உயர் படிப்புகளில் சேர்க்கை துவங்கியுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை துவக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணைய தள முகவரிகளில் பதிவு செய்யலாம் என, உயர் கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள கடலுார், விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, இணையதளம் வாயிலாக கடந்த மாதம் 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது.தற்போது, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்க உள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில், இந்த ஆண்டு அரசு கல்லுாரிகளில் சேர மாணவ, மாணவியரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடலுார் அரசு கல்லுாரியில் முதலாண்டு சேர்க்கை நடைபெற உள்ள 1,329 இடங்களுக்கு 14,605 விண்ணப்பங்கள் வந்துள்ளது.விருத்தாசலம் அரசு கல்லுாரியில் 1,029 இடங்களுக்கு 8,112 விண்ணப்பங்களும், சிதம்பரத்தில் 930 இடங்களுக்கு 7,500, காட்டுமன்னார்கோவிலில் 330 இடங்களுக்கு 2,000, திட்டக்குடி கல்லுாரியில் 600 இடங்களுக்கு 1,965 விண்ணப்பங்களும் என, மாவட்டத்தில் 3,200 இடங்களுக்கு 34,200 விண்ணப்பங்கள் இதுவரை வந்துள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லுாரிகளி்ல் கலந்தாய்வு துவங்கியுள்ள நிலையில், கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில், முதற்கட்ட கலந்தாய்வு 10ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் மற்றும் அந்தமான் நிகோபாரைச் சேர்ந்த தமிழர்கள் போன்ற சிறப்பு பிரிவினருக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.

அதே நாளில், பிளஸ் 2 வகுப்பில் பகுதி 3ல் தமிழ் சிறப்பு பாடம் படித்து, அதில் 100 லிருந்து 55 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் பி.ஏ. தமிழ் பாடத்திற்கான கலந்தாய்வு நடக்கிறது.11ம் தேதி முதல் அனைத்து பாடங்களுக்கும் பொதுவான கலந்தாய்வு நடக்கிறது.

மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர்த்த பகுதி-3 முதன்மைப் பாடங்கள் அல்லது சி.பி.எஸ்.இ., படித்திருப்பின் மொழிப் பாடங்கள் தவிர்த்த முதன்மைப் பாடங்கள் நான்கில் மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு பெற்றுள்ள மதிப்பெண்களைக் கணக்கிடவும்.அதுவே அம்மாணாக்கரின் கட்ஆப் மதிப்பெண் ஆகும்.

அவ்வகையில், 11ம் தேதி 400 லிருந்து 340 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 12ம் தேதி 339 லிருந்து 320 வரையிலும், 13ம் தேதி 319 லிருந்து 300 வரையிலும், 16ம் தேதி 299 லிருந்து 290 வரையிலும், 17ம் தேதி 289 லிருந்து 280 வரையிலும் 18ம் தேதி 279 லிருந்து 271 வரையிலும் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

அதனை தொடர்ந்து, 20ம் தேதி பி.ஏ. தமிழ் மற்றும் பி.ஏ. ஆங்கிலம் பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அதில் பகுதி I தமிழ் அல்லது பகுதி II ஆங்கிலப் பாடங்களில் மட்டும் 100 லிருந்து 75 வரை மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் அவரவருக்கு உரிய கலந்தாய்வு நாளில், காலை 9:30 மணிக்கு பங்கேற்க வேண்டும்.

காலதாமதமாகவோ, உரிய நாளில் பங்கேற்காதவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை கோர இயலாது. கலந்தாய்வில் பங்கு பெறுவோர் தாங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தின் நகல், பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு அசல் மதிப்பெண் பட்டியல் மற்றும் 2 நகல்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், ஜாதிச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை 2 நகல்கள் மற்றும் உரிய சேர்க்கைக் கட்டணம் ஆகியவற்றுடன் வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.pacc.in என்ற இணைய தளத்திலோ அல்லது admission@pacc.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என, கல்லுாரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X