வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் பதிவு திட்டம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
விழுப்புரம் : ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் திட்டம், கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர்

விழுப்புரம் : ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் திட்டம், கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் 1,962 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, வீடு வீடாகச் சென்று ஆதார் எண் விபரங்களை 'படிவம்-6பி'யில் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.இப்பணியை கண்காணிக்க அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் 189 மேற்பார்வையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் அனைவரும் வீடு தேடிவரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்கள் ஆதார் எண்ணை 'படிவம்-6பி' மூலம் தெரிவித்துக் கொள்ளலாம்.மேலும், வாக்காளர் சேவை மையங்கள், இ- சேவை மையங்கள், மாவட்ட தேர்தல் அலுவலரால் ஏற்படுத்தப்படும் பொதுமக்கள் சேவை மையம் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின் அவர்களிடமிருந்து இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை பெற்று இணைக்கப்பட வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X