கிரைம் செய்திகள் ..

Added : ஆக 06, 2022 | |
Advertisement
வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை விருத்தாசலம்: குப்பநத்தநல்லுார் ராமர் மகன் மணிகண்டராஜன், 28. கல்லுாரி படிப்பை முடித்த இவர், அரசு வேலைக்கு படித்து வந்தார்.வேலை கிடைக்காத விரக்தியில் கடந்த 1ம் தேதி பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார்

வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை

விருத்தாசலம்: குப்பநத்தநல்லுார் ராமர் மகன் மணிகண்டராஜன், 28. கல்லுாரி படிப்பை முடித்த இவர், அரசு வேலைக்கு படித்து வந்தார்.வேலை கிடைக்காத விரக்தியில் கடந்த 1ம் தேதி பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
விருத்தாசலம்: ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் நேற்று நடியப்பட்டு பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக வந்த, டிப்பர் லாரியை (டி.என்.62 - சி.0964) மடக்கி சோதனை செய்ததில், கள்ளத்தனமாக கூழாங்கற்கள் கடத்தியது தெரிய வந்தது.போலீசார் வழக்குப் பதிந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சுபாஷ் சந்திரபோஸ், 27, என்பவரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X