கடலூர் மாவட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் பொருட்டு 33வது சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 7 ம் தேதி நடக்கிறது. 3,742 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 2வது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது குறைக்கப்பட்டு தற்சமயம் 6 மாத இடைவெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் பொருட்டு 33வது சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 7 ம் தேதி நடக்கிறது.

3,742 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 2வது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது குறைக்கப்பட்டு தற்சமயம் 6 மாத இடைவெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது.மேலும் 15.07.2022 முதல் 30.09.2022 வரை 75 நாட்களுக்கு மட்டுமே 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் விலையில்லா கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கடலுார் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தற்போது 12,48,000 பேருக்கு கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திட வேண்டியுள்ளது. அவர்கள் இந்த முகாமினை பயன்படுத்தி தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.இத்தகவலை கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X