மாநகராட்சி புதிய வாகனங்கள் அமைச்சர் துவக்கி வைப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளுக்கான வாகனங்களை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.கடலுார் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளுக்காக 15வது நிதிக்குழு மானிய திட்ட நிதியில் இருந்து ஒரு கோடியே 35 லட்சம் செலவில் 2 ஜே.சி.பி., ஒரு சிறிய ஜே.சி.பி., லேடர் ஆகிய வாகனங்கள் புதிதாக

கடலுார் : கடலுார் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளுக்கான வாகனங்களை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

கடலுார் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளுக்காக 15வது நிதிக்குழு மானிய திட்ட நிதியில் இருந்து ஒரு கோடியே 35 லட்சம் செலவில் 2 ஜே.சி.பி., ஒரு சிறிய ஜே.சி.பி., லேடர் ஆகிய வாகனங்கள் புதிதாக வாங்கப் பட்டது.இதன் துவக்க நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.

கலெக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வரவேற்றார். துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் நவேந்திரன், பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, மண்டல அலுவலர்கள் பிரசன்னா, சங்கீதா செந்தில், இளையராஜா, சங்கீதா, கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கிரேசி, பார்வதி, செந்தில்குமாரி, புஷ்பலதா, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X