கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரர் குருபூஜை விழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதி சுந்தரர் குருபூஜை விழா நடந்தது.அதனையொட்டி நேற்று நேற்று மதியம் 12:00 மணிக்கு 63 நாயன்மார்களுக்கு அபிேஷக, ஆராதனையும், சுந்தரர் குருபூஜையும் நடந்தது. மாலை 3:00 மணிக்கு சிவதீர்த்தத்திற்கு சுந்தரமூர்த்தி சுவாமி எழுந்தருளி குளத்தில் முதலைவாய் பிள்ளை தருவித்த ஜதீகமும், இரவு 9:00 மணிக்கு

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதி சுந்தரர் குருபூஜை விழா நடந்தது.

அதனையொட்டி நேற்று நேற்று மதியம் 12:00 மணிக்கு 63 நாயன்மார்களுக்கு அபிேஷக, ஆராதனையும், சுந்தரர் குருபூஜையும் நடந்தது. மாலை 3:00 மணிக்கு சிவதீர்த்தத்திற்கு சுந்தரமூர்த்தி சுவாமி எழுந்தருளி குளத்தில் முதலைவாய் பிள்ளை தருவித்த ஜதீகமும், இரவு 9:00 மணிக்கு சுந்தரமூர்த்தி சுவாமிகள் வெள்ளை யானையின் மீது வீதியுலா நடந்தது. விழாவில் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்து. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் பங்கேற்றனர்.


திருப்பதிகங்கள் பாராயணம்
ஆடி சுவாதியையொட்டி சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பதிகங்கள் பாராயணம் நடந்தது. கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சென்னை மணிகண்டன் சிவாச்சாரியார், திருக்குற்றாலம் சுப்ரமணியன் தலைமையில் சுந்தரமூர்த்தி நாயனாரின் அற்புத திருப்பதிகங்கள் பராயணம் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X