விளையாட்டு போட்டியில்பி.எஸ்.ஜி.ஜி., அமர்க்களம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவை:பீளமேடு, பி.எஸ்.ஜி.ஜி., கன்யாகுருகுலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், பல்வேறு விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.நேரு உள்விளையாட்டு அரங்கில், எட்டாவது எஸ்.என்.எஸ்., ஜூனியர் தடகளப் போட்டி, இரு நாட்கள் நடந்தது. பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பீளமேடு, பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், பல்வேறு போட்டிகளில்
விளையாட்டு போட்டியில்பி.எஸ்.ஜி.ஜி., அமர்க்களம்

கோவை:பீளமேடு, பி.எஸ்.ஜி.ஜி., கன்யாகுருகுலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், பல்வேறு விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.நேரு உள்விளையாட்டு அரங்கில், எட்டாவது எஸ்.என்.எஸ்., ஜூனியர் தடகளப் போட்டி, இரு நாட்கள் நடந்தது. பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பீளமேடு, பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.100 மீட்டர், 200 மீட்டர், 300 மீட்டர், 600 மீட்டர், 1,000 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், தொடரோட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, 15 மாணவியர் வெற்றி வாகை சூடினர். வாலிபால் போட்டியில், மூன்றாமிடம் பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X