திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நாகலட்சுமி செய்திக்குறிப்பு:இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு கோட்டா பிரிவினருக்கு வரும் 10ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து, முதல் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 11ம் தேதியும், கலை பாடப்பிரிவுகளுக்கு 12ம் தேதியும் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.
மேலும், மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் விபரங்கள் http:// www.gasctvn.com என்ற கல்லுாரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டடுள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அவர்களின் பொபைல் போனுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்டும்.மேலும், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கல்லுாரிக்கு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து, அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் 2 செட் ஜெராக்ஸ் மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வரவேண்டும்.
கலந்தாய்வு அன்றே கட்டணம் செல்லுத்தப்பட வேண்டும். இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 23ம் தேதியும், கலை பாடப்பிரிவுகளுக்கு 24ம் தேதியும் நடைபெறும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.