போலி கணக்கு துவங்கி ரூ. 54 லட்சம் மோசடி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருநெல்வேலி:ஆசிரியர்களின் பெயரில் போலியான கணக்கு துவங்கி கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று மோசடி செய்த ஆசிரியை லீனா, சகோதரி சலோமி கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் ஆர்.சி., நடுநிலைப் பள்ளி ஆசிரியை லீனா 57. இவரது சகோதரி சலோமி 60. அலைபேசி செயலி மூலம் உடன் பணிபுரியும் ஆசிரியர்களின் வங்கி கணக்கு தகவல்களைப் பெற்று சேரன்மகாதேவி கூட்டுறவு சங்கத்தில்

திருநெல்வேலி:ஆசிரியர்களின் பெயரில் போலியான கணக்கு துவங்கி கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று மோசடி செய்த ஆசிரியை லீனா, சகோதரி சலோமி கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் ஆர்.சி., நடுநிலைப் பள்ளி ஆசிரியை லீனா 57. இவரது சகோதரி சலோமி 60. அலைபேசி செயலி மூலம் உடன் பணிபுரியும் ஆசிரியர்களின் வங்கி கணக்கு தகவல்களைப் பெற்று சேரன்மகாதேவி கூட்டுறவு சங்கத்தில் போலியான கணக்கு துவங்கி ரூ.54 லட்சம் கடன் பெற்றனர். கடன் பெறாமலேயே மாதந்தோறும் சம்பளத்தில் கடனுக்கு தொகை பிடிக்கப்படுவதை அறிந்த சக ஆசிரியர்கள் இதுகுறித்து புகார் செய்தனர்.

எஸ்.பி.சரவணன் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் ஆசிரியை லீனா, சகோதரி சலோமியை கைது செய்தனர். காசோலைகள் மூலம் 54 லட்சம் ரூபாய்க்கு மோசடி செய்ய திட்டமிட்டனர். ரூ 13 லட்சம் மட்டுமே எடுத்துள்ளனர். 41 லட்சம் ரூபாய் மோசடி தடுக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X