புதிய சாதனை படைத்தகடற்படை பெண் விமானிகள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுடில்லி:நம் கடற்படையின் ஐந்து பெண் விமானிகள், வடக்கு அரபிக் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு புதிய சாதனை படைத்துள்ளனர்.இது பற்றி கடற்படை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள கடற்படைப் பிரிவில் பணியாற்றும் பெண் விமானிகள், தனியாக 'டோர்னியர்' ரக போர் விமானத்தில் பயணித்து சாதனை படைத்துள்ளனர். இவர்கள் வடக்கு அரபிக்
புதிய சாதனை படைத்தகடற்படை பெண் விமானிகள்

புதுடில்லி:நம் கடற்படையின் ஐந்து பெண் விமானிகள், வடக்கு அரபிக் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு புதிய சாதனை படைத்துள்ளனர்.
இது பற்றி கடற்படை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள கடற்படைப் பிரிவில் பணியாற்றும் பெண் விமானிகள், தனியாக 'டோர்னியர்' ரக போர் விமானத்தில் பயணித்து சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் வடக்கு அரபிக் கடலில் சுற்றி வந்தனர்.ஆஞ்சல் சர்மா, ஷிவாங்கி, அபூர்வா கீதா, பூஜா பாண்டா, பூஜா ஷெகாவத் ஆகிய பெண் விமானிகள் இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்டனர். மிகவும் கடினமான இந்தப் பயணத்தை அவர்கள் வெற்றிகரமாக முடித்தனர். பெண் விமானிகள் மட்டும் தனியாக கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X