இந்திய தயாரிப்பு போர் விமானம் வாங்க அமெரிக்கா உட்பட 6 நாடுகள் ஆர்வம்

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுடில்லி-“நம் நாட்டில் தயாரிக்கப்படும் 'தேஜஸ்' போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட ஆறு நாடுகள் ஆர்வமாக உள்ளன,” என, ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் கூறினார். லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராணுவ இணை அமைச்சர் அஜய் பட், “நம் நாட்டின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரிக்கும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-“நம் நாட்டில் தயாரிக்கப்படும் 'தேஜஸ்' போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட ஆறு நாடுகள் ஆர்வமாக உள்ளன,” என, ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் கூறினார்.



latest tamil news


லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராணுவ இணை அமைச்சர் அஜய் பட், “நம் நாட்டின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரிக்கும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா, எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வமாக உள்ளனர்.


latest tamil news


''மலேஷியா 2019லேயே தேஜஸ் போர் விமானங்களுக்கு 'ஆர்டர்' கொடுத்து உள்ளது,” என்றார்.மலேஷியா தற்போது பயன்படுத்தி வரும் ரஷ்யாவின் 'மிக் 29' ரக போர் விமானங்களை, தன் ராணுவத்தில் இருந்து விலக்க முடிவு செய்துள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒற்றை இன்ஜின் கொண்ட தேஜஸ் இலகு ரக போர் விமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்க மலேஷிய அரசு முடிவு செய்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X